நான் இந்து, ஏக்தா பெண்களுக்கான ஆதாரம் மையத்தில் வாழ்க்கைத்திறன் கல்விபயிற்சியாளராகவும்,
தற்போது senior programme associate ஆகவும் பணிபுரிந்துவருகிறேன். பள்ளிகளுக்கு சென்று வளர்இளம்குழந்தைகளுக்கு வாழ்க்கைதிறன் கல்விபயிற்சி கொடுப்பது ம்மற்றும் கிராமங்களுக்கு சென்று பெண்களுக்கான கூட்டம் போடுவதும் மேலும் அக்கூட்டத்தில் பெண்களுக்கான உரிமை மற்றும் பெண்களுக்கான உதவி எண் பற்றியும் பேசுவேன். இந்த சமூகம் சார்ந்த பணி என்னை பல்வேறு வகையில் மேம்படுத்தியது – எதையும்
எதிர்கொண்டு, அதற்கான தீர்வினை காணும் உந்துதலை என்னுள் ஏற்படுத்தியது. அப்படியான
ஒரு நிகழ்வினை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.
ஆறுமாதத்திற்கு முன் என்வீட்டருகில் ஒருவயதானபாட்டிஒருவர் ஒருவாரமாக ரோட்டிலே வசித்துவந்தார்.மேலும் அவர் உடல்நிலைமையும் மோசமான நிலைமையில் இருந்தது. நானும்அருகில் சென்று விசாரித்துப்பார்த்தேன் சரியான தகவல் யாரும் கொடுக்கவில்லை. பிறகு, நான் முதியோருக்கான உதவியன் 14567 என்ற எண்ணிற்கு அழைத்து இந்தப் பாட்டியைப் பற்றி கூறினேன். பிறகு அவர்கள் கூடல்நகர் போலீஸ் ஸ்டேஷன் என்னுடைய இணைப்பை போலீசிற்கு கொடுத்தனர். முதலில் பேச தயங்கினேன் பிறகு நான் எங்கே வேலை பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு தகவல்கள் கொடுத்தேன். பிறகு போலீஸ் எங்கள் தெருவிற்குவந்து அந்த பாட்டிமாவை அழைத்துசென்று அவர்களுக்கு மருத்துவ உதவிதேவை என்று ஆம்புலன்ஸ் வசதியுடன்அவர்களை G H க்கு அனுப்பிவைத்தனர். பிறகு ஒரு வாரம் கழித்து அந்த பாட்டிமாவைபற்றி முதியோர் உதவிஎண் மூலமாக அவர்கள் நன்றாக உள்ளார்களா என்று தெரிந்துகொண்டேன். பிறகு எனக்கு ஏற்பட்ட ஒருமனநிம்மதி சொல்லமுடியாத அளவிற்கு அவ்வளவு நெகிழ்ச்சியை கொடுத்தது. எனவே எனக்கு இந்த யோசனை ஏக்தாவில் பணிபுரிந்துதற்குப் பிறகுதான் போலீசாரிடம் பேசுவதற்கு தைரியமும் மற்றும் முதியோருக்கான உதவிஎண்கள் பற்றியும் தெரிந்துகொண்டேன் .எனவே இதன் மூலமாக ஒருத்தருக்கு உதவி செய்ததைப் பார்த்து எனது தெருவில் உள்ள மக்களும் மேலும் என்னுடைய வீட்டாரும் என்னை பாராட்டினர். அது மட்டுமல்லாது, ஆதரவற்றோரை மீட்பதற்கான தன்னார்வலர்கள் குழுவிலும் நான் இணைந்துள்ளேன். என்னுடைய இந்த சமூக ஆர்வலர் பணி என்னை மேலும் தன்னம்பிக்கையும், துரிதமாய் செயல்பட்டு தீர்வு காணும் பக்குவத்தையும் கொடுத்துள்ளது என்றே கூற வேண்டும். எனக்கான இந்த வழிதடத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ள Vக்தாவுடன் இணைந்து செயல்படுவதில் பெரும் உவகை அடைகிறேன்.
Indu, a Senior
Programme Associate at Ekta, shares how does her work at Ekta helps her to
develop her personal and social ‘self’; how much does she satisfy in doing her
job wholeheartedly! She explained, she rescued an elderly woman who was sick
and deserted on the road in the neighbourhood. The people just watched her
staying on the platform but not doing anything. She called the elderly helpline
which she used to talk about it to sensitize women. The
elderly woman was admitted in the hospital and was taken to the care home. Indu
has been added in the volunteer group who work for the elderly people who are
deserted. She feels very satisfied with the job she does for Ekta which paved a
way to find her new ‘self’.
